Also Watch
Read this
By: Manigandan Raja

எண்ணெய் வளத்தை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி :
எதிர்ப்பாளர்கள் மூலம் நாட்டை பிளவுபடுத்தவும், எண்ணெய் வளத்தை கைப்பற்றவுமே அமெரிக்கா போர் தொடுத்துள்ளதாக ஈரானின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி குற்றம்சாட்டி உள்ளார்.
தலைநகர் தெஹ்ரானில் செய்தியாளரிடம் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நோக்கம் ஈரானின் இறையாண்மையை மீறுவதும், நாட்டை பலவீனப்படுத்துவதுமே ஆகும் என கூறியுள்ளார்.
மேலும், பகை அதிகரிப்பதற்கு முன்பே ஈரான் ராஜதந்திர முயற்சிகளிலும், பலசுற்று பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட உலகளாவிய எரிசக்தி வளங்களை கைப்பற்றுவதே அமெரிக்காவின் உத்தி என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved