Also Watch
Read this
By: Manigandan Raja

தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால், அமெரிக்காவின், 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. சீனா, அதனருகே உள்ள தைவானை நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி, 99 ஆயிரத்து 822 கோடி ரூபாய் மதிப்பில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா ஒப்பந்தம் போட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீனா, அமெரிக்காவின் ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த 20 நிறுவனங்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved