சந்தேகபுத்தியால் சிதைந்த குடும்பம்

6 வருடங்களுக்கு பின் அதிரடி தீர்ப்பு - அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்
kkr crime
kkr crime
Published on: 

விடிந்தும் விடியாமலும் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பெயிண்டர். அதிகப்படியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மனைவி. மனைவி உயிரிழந்ததும் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன கொடூரன். கட்டிய மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? தப்பி ஓடிய கணவன் பிடிபட்டாரா?

வீட்டிற்குள் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்த ரூபா
பெயிண்டர் வேலை பாக்குற கார்த்திக் வழக்கம்போல வேலைக்கு போய்ருந்துருக்காரு. மனைவி ரூபா மட்டும் வீட்டுல இருக்க, ரெண்டு பசங்களும் அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருந்துருக்காங்க. அந்த நேரம் பாத்து, தற்செயலா சொந்தக்காரங்க சிலர் ரூபாவ, பாக்க வந்திருக்காங்க. வாசல்ல நின்னு ரூபா, ரூபான்னு கூப்டுருக்காங்க. ஆனா வீட்டுக்குள்ள இருந்து எந்த சத்தமும் வரல. அதனால, சந்தேகப்பட்டு உள்ள போய் பாத்துருக்காங்க சொந்தக்காரங்க. அப்ப, வீட்டுக்குள்ள ரூபா, ரத்த வெள்ளத்துல மூச்சு பேச்சு இல்லாம கிடந்துருக்காங்க. அத பாத்ததும் அதிர்ச்சியானவங்க, உடனே அக்கம் பக்கத்துல உள்ளவங்க உதவியோட, ரூபாவ மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போனாங்க. அவங்கள பரிசோதனை பண்ண டாக்டர்கள், ரூபா ஏற்கெனவே உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க.

Related Link

மண்டையோடாக மாறிய கணவன்

ரூபா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் தகராறு
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டைல உள்ள குஞ்சிகிரிபாளையத்த சேர்ந்த கார்த்திக்கும், ரூபாவுக்கும் கல்யாணமாகி 14 வயசுல ஒரு மகளும், 12 வயசுல ஒரு மகனும் இருக்காங்க. பெயிண்டர் வேலைக்கு போய் குடும்பத்த கவனிச்சிட்டு வந்துருக்காரு கார்த்திக். நல்லபடியா போய்ட்டு இருந்த இவங்க வாழ்க்கையில, செல்போன்னால மிகப்பெரிய பிரச்சினை வந்திருக்கு. ரூபா, எப்ப பாத்தாலும் செல்போனும் கையுமாவே இருந்ததா சொல்லப்படுது. புருஷன் பிள்ளைகள கூட சரியா கவனிக்காம, காலையில இருந்து நைட் வரைக்கும் செல்போன்ல பேசிட்டே இருந்துருக்காங்க, இல்லன்னா மெசேஜ் பண்ணிட்டு இருந்துருக்காங்க. இது, கணவன் கார்த்திக்கு கோவத்தோட சேத்து சந்தேகத்தையும் உண்டாக்கியிருக்கு.

newstamil.tv