news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மண்டையோடாக மாறிய கணவன்
tv

Also Watch

tv

Read this

மண்டையோடாக மாறிய கணவன்

ரேவா, மத்திய பிரதேசம்

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செப்டிக் டேங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடு. சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி. கணவனை கொலை செய்துவிட்டு கமுக்கமாக இருந்த பயங்கரம். ஆறு மாதங்களுக்கு பிறகு கொடூர கொலை வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? போலீஸிடம் அழுது நாடகமாடிய கொலைகார மனைவி சிக்கினாரா? நடந்தது என்ன?

செப்டிக் டேங்கை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்
ஒரு வீட்டுக்கு பின்னாடி இருக்குற செப்டிக் டேங்க்ல அடைப்பு ஏற்பட்டதால, கழிவுநீர் வெளியே வராம தேங்கி நின்னுட்டு இருந்துருக்கு. அதனால, அந்த வீட்டு உரிமையாளர் உடனே தூய்மை பணியாளர வர வச்சு, மோட்டர் போட்டு கழிவுகள வெளியே எடுக்க சொல்லிருக்காரு. அப்படி, அந்த தூய்மை பணியாளரும் தன்னோட வேலைய பாத்துட்டு இருக்கும்போது, சாக்கடைக்குள்ள உள்ள ஏதோ ஒன்னு பெருசா சிக்கிருக்கு. என்னடா இது தேங்காய் ஓடா இருக்குமோ, அதனால தான் அடைப்பு ஏற்பட்டுருக்கோன்னு சொல்லி, அதை கையில் எடுத்து, தண்ணி ஊத்தி கழுவி பாத்தவருக்கு கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா, அவர் கையில இருந்தது தேங்காய் ஓடு இல்ல, மண்டை ஓடு. தகவல் கிடைச்சதும் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, அந்த செப்டிக் டேங்ல இன்னும் ஆழமா தேட சொல்லிருக்காங்க.

டேங்கில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி
அப்போ, உள்ள இருந்து ஒரு நீல நிற சட்டையும், சில எலும்புத் துண்டுகளும் மீட்கப்பட்டத பாத்து அங்க இருந்தவங்களுக்கு தூக்கி வாரி போட்டுருக்குது. அதுக்குப்பிறகு, புலன் விசாரணையில இறங்குன போலீஸ்காரங்க, அந்த மண்டை ஓடு யாரோடது? அவரு எப்படி அதுக்குள்ள விழுந்தாருன்னு கண்டுபிடிக்க தீவிர விசாரணைய ஆரம்பிச்சாங்க. முதற்கட்டமா அந்த ஏரியால காணாம போனவங்க லிஸ்ட எடுக்குறாங்க. கரெக்டா 6 மாசத்துக்கு முன்னாடி, பிரின்ஸ் அப்படி-ங்குறவரு காணாம போனது தெரியவருது. உடனே அவரோட தம்பியை கூப்பிட்டு செப்டிக் டேங்க்ல இருந்து மீட்ட நீல நிற சட்டைய காட்டிருக்காங்க. அத பாத்த இளைஞன், சார்... இது என் அண்ணனோட சட்டைதான் சார்ன்னு சொல்லி, கதறி அழுதுருக்காரு.

பிரின்ஸின் மனைவி துளசி மீது போலீசாருக்கு சந்தேகம்
அதுக்குப்பிறகு, போலீஸ்காரங்க நேரா பிரின்ஸ் வீட்டுக்கு போய், அங்க இருந்த அவரோட மனைவி துளசிகிட்ட நடந்தத சொல்லிருக்காங்க. அத கேட்டதும் அவங்க அழுது ஒப்பாரி வச்சிருக்காங்க. ஆனா, போலீஸ்காரங்களுக்கு துளசி மேல சந்தேகம் வந்துருக்குது. கடந்த 6 மாசமா புருஷனை காணோம்னு கவலைப்படாம, இப்போ மண்டை ஓடு கிடைச்ச உடனே இவ்வளவு அழுது ஆர்பாட்டம் பண்றாங்கன்னு சந்தேகப்பட்ட போலீஸ், துளசியோட செல்போன ரகசியமா வாங்கி செக் பண்ணாங்க.

செல்போன் மூலம் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

அதுல பல மெசேஜ்கள் டெலீட் செய்யப்பட்டிருந்ததால, சைபர் கிரைம் உதவியோட அதை மீட்டப்போ தான் பல திடுக்கிடும் உண்மைகளாம் வெளிய வந்துச்சு. கணவர் பிரின்ஸ் காணாம போன அன்னைக்கு நைட்டு, துளசி அதே ஊர சேர்ந்த ஷோயப்-ங்குற ஒரு இளைஞன்கூட 50 முறைக்கு மேல பேசிருக்காங்க. கடைசியா சோயப் கிட்ட இருந்து ஒரு மெசேஜூம் வந்திருக்கு. அதுல, வேலை முடிஞ்சது, இனி யாரும் நமக்கு இடையூறு பண்ண மாட்டாங்கன்னு இருந்துச்சு. உடனே, அந்த ஷோயப்ப ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு வந்து போலீஸ்காரங்க விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சாங்க. அதுலதான் கடந்த 6 மாசத்துக்கு முன்னாடி நடந்த கொடூரமான விஷயம் வெளிச்சத்துக்கு வந்துச்சு.

துளசிக்கும், ஷோயப்புக்கும் இடையே ஏற்பட்ட தகாத உறவு
மத்திய பிரதேச மாநிலம், ரேவாவ சேர்ந்த துளசிக்கும், பிரின்ஸுக்கும் கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்குது. இந்த சூழல, அதே ஏரியாவ சேர்ந்த ஷோயபுக்கூட துளசிக்கு பழக்கம் ஏற்பட்டுருக்கு. இந்த பழக்கம் நாளடைவுல திருமணத்த மீறுன உறவா மாறிருக்கு. பிரின்ஸ் வேலைக்கு போன நேரம் பாத்து, ஷோயப் அடிக்கடி துளசிய பாக்க வீட்டுக்கு வந்திருக்கான். இத பாத்து அக்கம் பக்கத்துல உள்ளவங்க சிலர், பிரின்ஸ்கிட்ட சொல்லிருக்காங்க.. விஷயத்த கேட்டு கடுப்பான பிரின்ஸ், தன்னோட மனைவிய கண்டிச்சிருக்காரு. ஆனா, அதுக்கப்புறமும் துளசி தன்னோட தகாத உறவ கைவிடாம தொடர்ந்துட்டே இருந்துருக்காங்க.

காதலனுடன் சேர்ந்து திட்டம்
இவ்வளவு சொல்லியும் திருந்தாம உன் இஷ்டத்துக்கு பன்றயானு பிரின்ஸ், மனைவி துளசிய அடிச்சு செல்போனையும் பிடுங்கி வச்சிக்கிட்டாரு. பிரின்ஸ் பண்றத பாத்து கடுப்பான துளசி, தன்னோட காதலன் ஷோயப் கூட சேர்ந்து கணவன கொல்ல பிளான் பண்ணிருக்காங்க. சம்பவத்தனைக்கு நைட்டு, ஆழ்ந்து தூங்கிட்டு இருந்துருக்காரு பிரின்ஸ். அப்போ, காதலன வீட்டுக்கு வர வச்ச துளசி, காதலனோட சேர்ந்து பிரின்ஸோட கழுத்த நெரிச்சு, இரும்பு கம்பியால தலை பகுதியில தாக்கி துடிக்க துடிக்க கொன்னுருக்காங்க.

துளசியையும், ஷோயப்பையும் கைது செய்த போலீசார்
சடலத்த இப்போ வெளிய கொண்டு போனா மாட்டிப்போம்னு பயந்து ரெண்டு பேரும், வீட்டுக்கு பின்னாடி இருந்த செப்டிக் டேங்க திறந்து, அதுக்குள்ள பிரின்ஸோட சடலத்த போட்டு மூடிருக்காங்க. சடலத்த செப்டிக் டேங்கல போட்டுட்டா, கழிவுகள் உடலைச் சிதைச்சுடும், அதோட அதுல இருந்து வர துர்நாற்றம் வந்தா யாருக்கும் சந்தேகம் வராதுன்னு நினைச்சிருக்காங்க. அதுக்கப்புறம், துளசியும், ஷோயப்பும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம வழக்கம்போல இருந்துருக்காங்க. கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த இந்த கொடூர சம்பவம் செப்டிக் டேங்க் அடைப்பால, வெளிச்சத்துக்கு வந்துருக்குது. அதுக்குப்பிறகு, கொலையாளி துளசியையும், ஷோயப்பையும் கைது பண்ணி ஜெயில்ல தள்ளிட்டாங்க போலீஸ்.

Related Link
இளைஞருடன் இல்லீகல், கள்ளக்காதலில் மயங்கிய மனைவி

இளைஞருடன் இல்லீகல், கள்ளக்காதலில் மயங்கிய மனைவி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
14 hrs 12 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau