news-tamil-logo

3/16/2026, 3:37:40 PM

news-tamil-logo
more
Home districtnews இளைஞருடன் இல்லீகல், கள்ளக்காதலில் மயங்கிய மனைவி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

இளைஞருடன் இல்லீகல், கள்ளக்காதலில் மயங்கிய மனைவி

விருதுநகர்

Posted on: Feb 13, 2026 09:51 AM

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆட்டோ டிரைவரை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்த கும்பல். ஆட்டோ டிரைவரின் மனைவி உள்ளிட்ட 5 பேர் கைது. கல்குவாரிக்கு சென்ற ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்த கும்பல் யார்? ஆட்டோ டிரைவரின் மனைவிக்கும் கொலை கும்பலுக்கும் என்ன சம்மந்தம்? பின்னணி என்ன?

கல்குவாரிக்கு செல்லும் பாதையில் கிடந்த ஆண் சடலம்
கல்குவாரிக்குப்போற பாதையில ஒரு ஆண் சடலம் கெடந்துருக்குது. பக்கத்துலயே இன்னொருத்தரு வலியால துடிச்சிட்டு இருந்துருக்காரு. அவ்வழியாபோன பொதுமக்கள் போலீசுக்கு போன் பண்ணி தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார், அந்த ஆணோட சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிட்டு, காயமடைஞ்ச நபர்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான், அங்க என்ன நடந்தது? எதுக்காக ஒருத்தரு உயிரிழந்தாரு? இன்னொருத்தரு எதுக்காக வலியில துடிச்சிட்டு இருந்தாருனு எல்லாத்துக்குமே விடை கிடைச்சது.

பெட்ரோல் பங்குக்கு வந்த சங்கருடன் பிரியாவிற்கு தகாத உறவு

மதுரை, ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் ரெண்டாவது தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரமேஷ். 46 வயசான இவரு தன்னைவிட 17 வயசு குறைவான பிரியாங்குற பொண்ண கல்யாணம் பண்ணிருக்காரு. இந்த தம்பதிக்கு ரெண்டு பிள்ளைகளும் இருக்காங்க. இவங்களுக்கு வயசு வித்தியாசம் ஒருபக்கம் இருந்தாலும், கல்யாணம் ஆன நாள்ல இருந்தே கணவன், மனைவிக்குள்ள அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட சண்டை நடந்துட்டே இருந்துருக்குது. அதனால, தன்னோட தாய் வீட்டுக்கு அடிக்கடி கோவிச்சிக்கிட்டு போயிருக்காங்க பிரியா. இதுக்கு மத்தியில பெட்ரோல் பங்க்ல வேலை பாத்த பிரியாவுக்கு, அங்க தன்னோட பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வந்த 27 வயசான சங்கருங்குற இளைஞர்கூட நட்பு ஏற்பட்ருக்குது. அந்த நட்பு ஒருகட்டத்துல தகாத உறவுலபோய் முடிஞ்சிருக்கு.

கணவன் ரமேஷ் கண்டித்தும் வேலைக்கு சென்று வந்த பிரியா
சங்கர்கிட்ட மணிக்கணக்குல செல்போன்ல பேசின பிரியா, வாட்ஸ்அப்லயும் வீடியோ கால் மெசேஜ்னு பிசியாவே இருந்துருக்காங்க. அப்படிதான், ஒருநாள் சங்கர்கிட்ட வீடியோகால் பேசிட்டு இருக்கப்ப மனைவி பிரியாவை கையும் களவுமா புடிச்சிருக்காரு ஆட்டோ டிரைவர். தன் மனைவிக்கிட்ட சண்டைபோட்ட கணவர் இனி வேலைக்கே போக வேண்டாம்னும் ஆர்டர் போட்ருக்காரு. அதோட, சங்கரோட ஊரு? வீட்டு முகவரி, போன் நம்பர் எல்லாத்தையும் ஒரு உறவினர் மூலமா வாங்கின ரமேஷ், மனைவியோட கள்ளக்காதலனுக்கு போன் பண்ணி கண்டிச்சிருக்காரு. ஆனா, ரமேஷோட அந்த கண்டிப்ப கண்டுக்காத பிரியா வழக்கம்போல வேலைக்கு போயிருக்காங்க. அதனால, ரெண்டுபேருக்கும் வீட்ல பெரிய பிரளயமே வெடிச்சிருக்கு.

சங்கர் வீட்டுக்கு பிரியா சென்றதை கண்டறிந்த ரமேஷ்
ஏற்கனவே கணவரை கண்டாலே மனைவிக்கு ஆகாது. அப்படி இருக்கப்ப, சங்கர வச்சி சண்டை மேலும் பெருசானாதால கோபப்பட்ட பிரியா வழக்கம்போல பிள்ளைகளை அழைச்சிக்கிட்டு வீட்டவிட்டு வெளிய போய்ட்டாங்க. மனைவி அவங்க அம்மா வீட்டுக்குதான் போயிருப்பாங்கனு நினைச்ச கணவனும் ஒரு வாரமா அவங்கள தேடவே இல்லை. இதுக்குமத்தியில, பிரியாவ சிவகாசி பக்கத்துல உள்ள புதுக்கோட்டை கிராமத்துல வேற ஒரு ஆண்கூட பைக்ல பாத்ததாகவும், தன்னை பாத்தும் பாக்காதமாதிரி போய்ட்டதாகவும் ஒரு உறவினர் ஆட்டோ டிரைவர் ரமேஷ்கிட்ட சொல்லிருக்காரு. அதக்கேட்டு ஷாக்கான அவரு, மனைவி அங்க எதுக்கு போகணும்? சங்கரோட வீடு அங்கதான இருக்குது, ஒருவேளை அங்க போயிருப்பாங்களானு சந்தேகப்பட்டதோட உடனே மாமியார் வீட்டுக்கும்போய் செக் பண்ணிருக்காரு. அப்பதான் தெரிஞ்சது ரமேஷ் நினைச்சமாதிரியே மனைவி பிரியா, சங்கர் வீட்டுக்குதான் போயிருக்காங்க அப்டிங்குற விஷயமே.

சங்கருடன் பேச்சுவார்த்தை நடந்த நண்பருடன் சென்ற ரமேஷ்
அதுக்குப்பிறகு, செங்கல்பட்டை சேர்ந்த தன்னோட நண்பர் பாலாஜியை அழைச்சிக்கிட்டு வேகவேகமா புதுக்கோட்டை கிராமத்துக்குப்போன ரமேஷ், சங்கருக்கு போன் பண்ணி ஊருக்கு பக்கத்துல உள்ள கல்குவாரிக்கு வாங்க, கொஞ்சம் பேசணும்னு சொல்லிருக்காரு. எப்படியும் பிரச்சனை வெடிக்கும்னு முன்கூட்டியே கணிச்ச சங்கரும் தன்னோட நண்பர்களான ஆமத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன், புதுக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி, மேலத்தெருவை சேர்ந்த மணிசங்கரை அழைச்சிக்கிட்டு கல்குவாரிக்கு போயிருக்காரு. ரெண்டுதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திருக்காங்க. அப்போ, அடுத்தவனோட மனைவியையும், பிள்ளைகளையும் தங்கவச்சிருந்தா ஊர்ல உள்ளவங்க என்ன பேசுவாங்க? அது ரெண்டு குடும்பத்தை சேர்ந்தவங்களுக்குமே அசிங்கம் இல்லையானு பொறுமையா பேசிருக்காரு ரமேஷ். அவருகூட இருந்த நண்பர் பாலாஜியும் அதையே சொல்லிருக்காரு..

வாக்குவாதம் முற்றி இருதரப்பினருக்குள் அடிதடி
அத காதுலயே வாங்காத சங்கர் தரப்பு உன் மனைவிக்கே உன்னைய பிடிக்காமதான் ஓடி வந்துருக்கா? உன்னால ஒழுங்கா வச்சி காப்பாத்த முடியலனு வார்த்தைகளை விட்ருக்காங்க. அதனால ரெண்டுதரப்புக்கு வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்ருக்குது. அப்போ, சங்கர் தரப்பை சேர்ந்தவங்க ரமேஷை மரக்கட்டையால அடிச்சி கொலை செஞ்சிருக்காங்க. அத, தடுக்க வந்த பாலாஜியையும் கடுமையா தாக்கிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க. அடுத்து, பாலாஜிக்கிட்ட நடத்துன விசாரணையில நடந்த விவரம் அத்தனையும் வெளிய வந்துருக்குது. அடுத்து, ரமேஷோட மனைவி பிரியா, அவங்களோட கள்ளக்காதலன் சங்கர், நண்பர்கள் ராஜேஸ்வரன், மணிசங்கர், முத்துப்பாண்டினு அஞ்சு பேரையும் கைதுபண்ணி சிறையில அடைச்சிருக்காங்க காவல்துறையினர்.

Related Link
சிறுமியிடம் சில்லறை வேலையில் ஈடுபட்ட ஜோதிடர்

சிறுமியிடம் சில்லறை வேலையில் ஈடுபட்ட ஜோதிடர்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.64 கோடிக்கு மேல் வசூலித்த தாய் கிழவி திரைப்படம்

0
2 mins agoshare
Thaai kizhavi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved