news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews சிறுமியிடம் சில்லறை வேலையில் ஈடுபட்ட ஜோதிடர்
tv

Also Watch

tv

Read this

சிறுமியிடம் சில்லறை வேலையில் ஈடுபட்ட ஜோதிடர்

புத்தூர், கேரளா

78

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இரண்டு மணி நேரத்திற்குபிறகு அறையில் இருந்து அழுதுகொண்டே ஓடிவந்த 16 வயது சிறுமி. மகள் கூறிய விஷயத்தைக் கேட்டு கொந்தளித்த தாய். அடுத்த சில மணி நேரங்களில் லாட்ஜில் இருந்து இழுத்து வரப்பட்ட ஜோசியர். சிறுமி அறையில் இருந்து அழுது கொண்டே வந்தது ஏன்? சிறுமி தனது தாயிடம் கூறிய விஷயம் என்ன? ஜோசியர் லாட்ஜில் பதுங்கி இருந்ததற்கு என்ன காரணம்?

2 மணி நேரத்திற்குப்பின் அழுதுகொண்டே வந்த மகள்
பித்து பிடிச்ச மாதிரி இருந்த மகள் பழைய நிலைமைக்கு வரணும்னு நினைச்ச தாய் ஜோசியர்கிட்ட அழைச்சிட்டு போய்ருக்காங்க. நீங்க கொஞ்சம் வெளிய இருங்க உங்க மகளுக்கு பேய் பிடிச்சிருக்கு, பூஜை செய்யணும்னு சொன்ன ஜோசியர் ஒரு அறைக்குள்ள சிறுமிய அழைச்சிட்டு போய்ருக்காரு. ரெண்டுமணிநேரமாகியும் ஜோசியர் வெளிய வரவே இல்ல. அதுக்குப்பிறகு அழுதுகிட்டே வெளிய வந்த சிறுமி தன்னோட தாய்கிட்ட சொன்ன விஷயம் அதிர்ச்சியடைய வச்சிருக்கு. அதக்கேட்டு கொந்தளிச்ச தாய், ஜோசியர வாய்க்கு வந்தபடி திட்டுனதோட போலீஸ் ஸ்டேஷன்லபோய் கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. அதுக்குள்ள, தன்னோட இடத்துல இருந்து எஸ்கேப் ஆன ஜோசியர் ஒரு ஓட்டல்ல பதுங்கிட்டாரு. ஆனா, செல்போன் எண்ணை டிரேஸ் பண்ணி ஜோசியர மடக்கி பிடிச்சிட்டாங்க போலீசார்.

சமூக வலைதள வீடியோக்களால் ஃபேமஸான முராரி தந்திரி
கேரள மாநிலம், கொல்லம் பக்கத்துல உள்ள புத்தூர் பகுதியை சேர்ந்தவர்தான் ராஜன் பாபு என்ற முராரி தந்திரி. 52 வயசான இவரு ஆட்டோ டிரைவரா இருந்துருக்காரு. அது ஒருபக்கம் இருந்தாலும் ஒரு வயசான ஜோசியர்கிட்ட ஜோதிடத்த கத்துக்கிட்ட முராரி தந்திரி அதையே தொழிலா மாத்த பிளான் பண்ணிருக்காரு. அதுக்காக அவர் தேர்ந்தெடுத்த வழிதான் சோஷியல் மீடியா. குடும்ப பிரச்சனை சரியாக, தம்பதிக்குள்ள அன்யோன்யம் அதிகரிக்க, சொந்தபந்தங்களோட உள்ள முன்பகையை நீக்க, சொத்து பிரச்சனையை சரியாக்க தன்கிட்ட வந்து ஜோசியம் பாத்து பரிகாரம் செஞ்சா போதும், எல்லாமே பஞ்சா பறந்துரும்னு இன்ஸ்டா, யூடியூப், பேஸ்புக்னு சோஷியல் மீடியாவுல நிறைய வீடியோக்கள் வெளியிட்ருக்காரு முராரி. அதுமட்டுமில்லாம, தன் பரிகாரத்தால பலன் அடைஞ்சவங்கனு சிலரை பேச வச்சும் வீடியோ பதிவிட்ருக்காரு.

சமூக வலைதளங்கள்ல ஆக்டிவா இருந்த முராரியோட வீடியோக்களை பார்த்த மக்கள் பலரும் அவர்கிட்டபோய் ஜோசியம் பாத்துருக்காங்க. அதனால, ரொம்ப ஃபேமஸ் ஆன முராரி தந்திரி ஆயிரத்துல ஆரம்பிச்சி லட்சக்கணக்குல பணத்த குவிக்க ஆரம்பிச்சிருக்காரு.

சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்ற முராரி
இதுக்குமத்தியிலதான் ஒரு தாய் தன்னோட 16 வயது மகளை அழைச்சிக்கிட்டு முராரி தந்திரியை பார்க்க போயிருக்காங்க. என் பொண்ணு வீட்ல எப்போதும் பிடித்து பிடிச்ச மாதிரியே உக்காந்துருக்கா, கொஞ்சநாளாவே அவ தூங்குறது இல்ல, நைட்நேரத்துல வீட்டுக்கு வெளியபோய் நடமாடுறானு சொல்லிருக்காங்க அந்த தாய். அதுக்குப்பிறகு கண்ணமூடி சோழியை உருட்டிப்போட்ட ஜோசியர், உன் பொண்ணுக்கு பேய் புடிச்சிருக்கு, ஒரு இளம்பெண்தான் பிடிச்சிருக்கா, அவ உன் பொண்ணவிட்டு போகணும்னா சிறப்பு பூஜை செய்யணும், இல்லனா உன் பொண்ணவிட்டு அந்த இளம்பெண் போகமாட்டானு பயமுறுத்திருக்காரு.

அதக்கேட்டு, பதறுன தாய் தன் மகள பாடாபடுத்துற பேய் அவளவிட்டு போனா சரினு நினைச்சி பூஜைக்கு சம்மதிச்சிருக்காங்க. அதுக்குப்பிறகு சிறுமியை ஒரு தனியறைக்கு அழைச்சிட்டு போய்ருக்காரு முராரி தந்திரி.

கம்பி எண்ணும் ஜோதிடர் முராரி தந்தரி
ரெண்டுமணிநேரத்துக்குப்பிறகு அந்த அறைக்குள்ள இருந்து அழுதுகிட்டே வெளிய வந்த சிறுமி, ஜோசியர் தன்கிட்ட பாலியல் அத்துமீறல்ல ஈடுபட்டதா சொல்லிருக்காங்க. அதுக்குப்பிறகு சிறுமியோட தாய் கம்ப்ளைண்ட் குடுத்ததும் வழக்குப்பதிவு பண்ண போலீசார் ஜோசியர தேடி அவரோட வீட்டுக்கு போய்ருக்காங்க. ஆனா, முராரி தந்திரி தந்திரமா அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாரு. இதுக்குமத்தியில, தகவல் தெரிஞ்சி ஒண்ணுகூடுன சிறுமியோட உறவினர்கள் ஜோசியர கைது பண்ண சொல்லி ஆர்ப்பாட்டத்துல ஈடுபட ஆரம்பிச்சிட்டாங்க.

அதனால, முராரி தந்திரியோட போன் நம்பர டிரேஸ் பண்ணி அவர தேடுற வேலையில இறங்கிருக்காங்க போலீசார். அப்போ, ஒரு தனியார் லாட்ஜ்ல செல்போனோட லொகேஷன் காட்டிருக்குது. அடுத்து, அங்க போன போலீசார் ஒரு அறையில பதுங்கி இருந்த முராரி தந்திரியை கைது செஞ்சி இழுத்துட்டு வந்துருக்காங்க. இப்போ போக்சோ கேஸ்ல கம்பி எண்ணிட்டு இருக்காரு முராரி தந்திரி.

Related Link
மனைவியின் நடத்தையில் சந்தேகம்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமோனியா கசிவு உயிரிழப்பு எதிரொலி.. அடுத்த நொடி முதல்வர் போட்ட உத்தரவு

1
12 hrs 3 mins agoshare
Vijay orderbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved