தமிழ்நாடு

காவல் ஆய்வாளர் அதிமுக நிர்வாகியை தாக்கும் சிசிடிவி காட்சி

காவல் ஆய்வாளர் அதிமுக நிர்வாகியை தாக்கும் சிசிடிவி காட்சி

மக்களவை தேர்தலின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் அதிமுக நிர்வாகி ஒருவரை, காவல் ஆய்வாளர் சட்டையை பிடித்து இழுத்து சென்று தாக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ் பி யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தேர்தல் வாக்குப்பதிவின் போது பாமக மற்றும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகி சண்முக ராஜேஸ்வரனை விசாரணைக்கு அழைத்து செல்ல சென்ற காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன்ராஜா, அவரை சட்டை பிடித்து இழுத்து சென்று தாக்கினார். இதனால், காயம் அடைந்த சண்முக ராஜேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக நிர்வாகிகள் எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

00 Comments

Leave a comment