தமிழ்நாடு

3 ஆடுகளை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

3 ஆடுகளை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள கோபாலபுரம் என்ற
கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்., கிராமத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி
மலை அடிவாரத்தில் விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை வைத்து வாழ்ந்து வருவதாக
கூறப்படுகிறது.,

இந்நிலையில் இன்று இவரது ஆடுகள் மலை அடிவாரத்தில் உள்ள இவரது தோட்டத்து
பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் 3 ஆடுகளை வனத்திலிருந்து அடிவார
பகுதிக்கு வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி வனப்பகுதிக்குள்
சென்றதாக கூறப்படுகிறது.,

மற்ற ஆடுகளின் அலறல் சத்ததைக் கண்ட முருகன் வனப்பகுதியில் சென்று பார்த்த போது
ஆடுகளை விழுங்கிய உடலுடன் வனப்பகுதியில் மரக்கிளையில் சிக்கி செல்ல முடியாமல்
ஊர்ந்து கொண்டே மலைப்பாம்பு கிடப்பதைக் கண்டு வனத்துறைக்கு தகவல்
அளித்துள்ளார்.,

விரைந்து வந்த வனத்துறையினர் ஆடுகளை விழுங்கி மரக்கிளையில் சிக்கியுள்ள
மலைப்பாம்பை தீவரமாக கண்காணித்து வருகின்றனர்., மேலும் மலைப்பாம்பு விழுங்கிய
ஆடுகள் செரிமானம் ஆன உடன் அதன் எடை குறைந்து விரைவில் வனப்பகுதிக்குள்
சென்றுவிட வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.,

இதே பகுதியில் தேவி என்பவரது இரண்டு ஆடுகள் கடந்த வாரம் காணமால் போனதாகவும்,
இதே மலைப்பாம்பு விழுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது, அடிக்கடி ஆடுகளை
விழுங்கி வரும் மலைப்பாம்பினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.,

00 Comments

Leave a comment