news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாத்தியோசி...மாத்தியோசி
tv

Also Watch

tv

Read this

மாத்தியோசி...மாத்தியோசி

நீலகிரி

29

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nil 3(4)

நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக 50,000 சதுர மீட்டர் பரப்பளவில், கார்னேஷன், லில்லியம், கிரிசாந்தம், ஜெர்பரா போன்ற கொய் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. 300க்கும் மேற்பட்ட விவசாயிகளும் நேரடியாகவும் 3,000 தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

முதன் முறையாக சூரிய காந்தி மலர்கள் சாகுபடி

இந்த நிலையில் கோத்தகிரி கட்டப்பட்டு அருகே உள்ள கூக்கல் கிராம பகுதியில், முதல் முறையாக சூரிய காந்தி மலர்கள் சாகுபடி துவங்கப்பட்டுள்ளது. தற்போது, ஒரு மலர் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பெங்களூரு, சென்னை உட்பட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, அலங்கார வகைகளுக்காக விற்பனை செய்யப்படுகிறது.

சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை செலவு

இதுகுறித்து கக்குச்சி கொய்மலர் சாகுபடியாளர் சிவக்குமார் கூறுகையில் தைவான் நாட்டிலிருந்து முதல் முறையாக கொண்டுவரப்பட்ட விதைகள், அரை ஏக்கரில் சாகுபடி செய்ததில் தற்போது மலர்ந்துள்ளன. இந்த மலர் மலர 70 நாட்கள் வரை ஆகிறது. கக்குச்சி பகுதி காலநிலை இதற்கு ஏற்றதாக உள்ளது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய விதைகளுக்கு 3 லட்சம் வரை செலவாகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு மாவட்ட தோட்டக்கலைத்துறை மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

Related Link
இன்னும் OTP வரல சார்...

இன்னும் OTP வரல சார்...

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்

0
4 mins agoshare
பட்டுக்கோட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau