Also Watch
Read this
By: Fyrose Banu

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இயற்கை எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாடு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 
சிலிண்டர் பதிவு செய்த ஓடிபி எண் வரவில்லை
நாட்டில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்த அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டருக்கான ஓடிபி எண் பதிவு செய்ய முடியாததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். சிலிண்டர் தேவைக்கு முதலில் சிலிண்டர் எண்ணுக்கு காலிங் செய்தால் இணைப்பு துண்டிக்கப்பட்டு சிலிண்டர் பதிவு செய்யப்பட்டதாக ஓடிபி எண், மற்றும் சிலிண்டரின் விலையுடன் நமது செல்போனுக்கு மெசேஜ் வரும். ஆனால் பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர் தேவை என்று பதிவு செய்தால் ஓடிபி எண் வரவில்லை. 

சிலிண்டர் தட்டுப்பாட்டால் அவதியடைந்த மக்கள்
ஓடிபி எண் வந்தால் தான் சிலிண்டர் வாங்க முடியும் என்ற சூழல் உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உணவகங்கள் தற்போது வரை இயங்கி வருகிறது. தனியார் கேஸ் ஏஜென்சிகள் கூடுதல் விலைக்கு சிலிண்டரை விநியோகம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இன்டேன் கேஸ் நிறுவனத்தில் பதிவு செய்து ஓடிபி எண் பெற்றவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வருவதாகவும் நிறுவனத்தினர் தெரிவித்தனர். அத்தியாவசிய சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலிண்டர் விலை தொடர்ந்து கட்டுப்பாடு ஏற்பட்டால் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனவும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக தங்கு தடை இன்றி எரிவாயு சிலிண்டர் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved