எரிவாயு சிலிண்டர் பிரச்சனையால், அடுத்தடுத்து மக்களவை முடங்கியது. MODI JI, L.P.G. என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு தட்டுப்பாடு சமையல் காஸ் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து, இன்று மார்ச் 13ஆம் தேதியும், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து கடந்த மாதம் 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியதால், வளைகுடா பிராந்தியத்தில் போர் வெடித்தது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் பயணிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடை பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு காஸ் சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. "மோடி ஜி, தேவை எல்பிஜி" சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி உட்பட எதிர்க்கட்சி எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ‘‘மோடி ஜி, மோடிஜி - தேவை எல்பிஜி’’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கிரஸ் கண்டனம்இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமது பதிவில் கூறி இருப்பதாவது:ஈரான் அரசமைப்பு சட்டத்தின் தலைவரான அயதுல்லா கமேனி, பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், இதுகுறித்து பிரதமர் மௌனம் காக்கிறார். வெளியுறவு அமைச்சரும் அமைதியாக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இன்னும் இரங்கல் குறிப்புகூட இல்லை. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு ஈரானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால், ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு இந்தியா அமைதி காக்கிறது. இந்தாண்டு பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தான் தலைமை தாங்குகிறது. இந்த பிரிக்ஸ் நாடுகளில் ஈரானும் ஒரு பகுதி என்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும். 2024 மே மாதத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் மர்மமான முறையில் பலியானார். இதனைத் தொடர்ந்து, 2024 மே 21ல் ஒரு நாள் துக்கத்துக்கு மோடி அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, 2024 ஜூலை 1ஆம் தேதியில் நாடாளுமன்றம் கூடியபோது, இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது மட்டும் ஏன் தயக்கம்? ஏதோ ஒன்றில் சமரசம் செய்யப்பட்ட பிரதமர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நண்பருடன் பகையாவதைத் தவிர்க்க விரும்புகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். Related Link கொரோனா காலத்தைப் போல் கடந்து வருவோம் - பிரதமர் மோடி