news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கொ.ம.தே.கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு
tv

Also Watch

tv

Read this

கொ.ம.தே.கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

அண்ணா அறிவாலயம், சென்னை

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என ஒப்பந்தத்தில், கட்சித் தலைவர் ஈஸ்வரன் கையெழுத்திட்டார்

பரபரக்கும் தேர்தல் களம்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை 38 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, 196 தொகுதிகளை வைத்துக் கொண்டு, இதர கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு
டி.ஆர்.பாலு தலைமையிலான, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூட்டணியில் இருக்கும் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு, கடந்த முறையை விட குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு எடுத்தது. உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து வைகோ தலைமையில் நடந்த மதிமுக அவசர உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அண்ணா அறிவாலயத்திற்கு வைகோ வந்து சேர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

வைகோவுக்கு நான்கு தொகுதிகள்
திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டது. திமுக உடன் ஒப்பந்தம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு...
இந்த நிலையில், இன்று மார்ச் 13ஆம் தேதி, திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இடையே ஒப்பந்தம் இறுதி ஆனது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுக கூட்டணியில் இதுவரை...

* காங்கிரஸ் கட்சிக்கு 28 + ராஜ்யசபா 1 இடம்

* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2

* மனிதநேய மக்கள் கட்சி - 2

* மதிமுக - 4

* கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2

* தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை

* இதுவரை 38 தொகுதிகள் - மீதம் இருப்பது 196 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இனிமேல்...
தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம், தவாக உள்பட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது, பேச்சுவார்த்தை தொடர்கிறது.


Related Link
எம்.ஜி.ஆர். பாணியில், சசிகலா கட்சி அறிவிப்பு

எம்.ஜி.ஆர். பாணியில், சசிகலா கட்சி அறிவிப்பு

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
1 hr 3 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved