தமிழ்நாடு

முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை

முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை

புதுக்கோட்டையில் முன் விரோதம் காரணமாக பல்வேறு வழக்குகள் தொடர்புடைய இளைஞர்
சரமாரியாக வெட்டிக்கொலை...

புதுக்கோட்டை நகர்
விஸ்வநாத தாஸ் பகுதியைச் சேர்ந்தவர் உச்சி கார்த்தி வயது 25.

இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புதுக்கோட்டை நகரில் உள்ள
காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சீனி என்பவரும் நண்பர்களாக செயல்பட்டு
வந்துள்ளனர்

அதன் பிறகு ஏற்பட்ட முன்விரோதம் தான் தற்சமயம் இரண்டு பேரும் பிரிந்து
செயல்பட்டு வருவதாக
கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று மாலை விஸ்வ நாததாஸ் தெருவில் உள்ள உச்சி கார்த்தி
வீட்டில் கட்டுமானம் நடைபெற்றுள்ளதால் அதை பார்ப்பதற்காக கார்த்தி வந்துள்ளார்

அந்த சமயம் பார்த்து மூன்று பேர் அருவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன்
வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக கார்த்தியை வெட்டியுள்ளனர்

இதில் அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து கார்த்தி வெளியே ஓடிவந்துள்ளார்
ஆனால் மூன்று பேரும் அவரை விடாமல் துரத்தி வெட்டி கொலை செய்துவிட்டு
அங்கிருந்து தம்பி ஓடி விட்டனர்
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல்
அளித்துள்ளனர்
உடனடியாக திருக்கோணம் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை
மேற்கொண்டனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
விசாரணை மேற்கொண்டார் இதனை தொடர்ந்து கார்த்தி உடல் பிரேத பரிசோதனைக்காக
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது
இவரை தொடர்ந்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து இந்த கொலையை
முன்விரோதம் காரணமாக சீனி கொலை செய்திருக்கலாம் என்ற கருதி விசாரணை நடத்தியும்
சீனியை தேடியும் வருகின்றனர்
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்
புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது...

00 Comments

Leave a comment