தமிழ்நாடு

கள்ளச்சந்தையில் கரன்சி நோட்டுகள் பரிமாற்றம்

கள்ளச்சந்தையில் கரன்சி நோட்டுகள் பரிமாற்றம்

சென்னை விமான நிலையத்தில் கள்ளச்சந்தையில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை மாற்றி தரும் அடையாளம் தெரியாத நபர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும், உள்நாட்டிலிருந்து செல்பவர்களுக்கும் வசதியாக கவுண்டர்கள் அமைத்து பணபரிமாற்றம் செய்யப்படுகிறது . இந்நிலையில் அடையாளம் தெரியாத 3 பேர் கட்டுக்கட்டாக பணம் வைத்துக்கொண்டு மார்கெட் விலையை விட கூடுதலாக 5 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி வெளிநாட்டு பயணிகளுக்கு பணபரிமாற்றம் செய்துள்ளார். பின்னர் செய்தியாளர் வீடியோ எடுப்பதை உணர்ந்த அந்த நபர் அங்கிருந்து ஓட தொடங்கினர்.

00 Comments

Leave a comment