சென்னை

காதலர் தினத்தை முன்னிட்டு ரெட் ரோஸ் கட்டு ரூ.300 க்கு விற்பனை

காதலர் தினத்தை முன்னிட்டு ரெட் ரோஸ்  கட்டு ரூ.300 க்கு விற்பனை

 

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் ரெட் ரோஸ் ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிருஷ்ணகிரி, பெங்களூர்,ஒசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மஞ்சள், சிகப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் உள்ள ரோஜா பூக்கள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ரெட் ரோஷ் ஒரு கட்டு 300 ரூபாய்க்கும், கலர் ரோஸ் ஒரு கட்டு 250 ரூபாய்க்கும், மற்ற வகை ரோஜாப்பூக்கள் ஒரு கட்டு 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டநிலையில், ரோஜா பூக்கள் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
 

00 Comments

Leave a comment