news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews என்டிஏ கூட்டணியில் விஜய் - பியூஸ் கோயல் பதில்
tv

Also Watch

tv

Read this

என்டிஏ கூட்டணியில் விஜய் - பியூஸ் கோயல் பதில்

தேஜ கூட்டணியில் பிரச்சனை இல்லை

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தங்கள் கூட்டணியில் பிரச்சனை இல்லை என்று, பியூஷ் கோயல் தெரிவித்தார்.

திருச்சியில் பொதுக்கூட்டம்
திருச்சியில் இன்று மார்ச் 11ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜய பாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா ஆட்சி
இதுதொடர்பாக, பியூஸ் கோயல் கூறியதாவது;
திருச்சியில் நடைபெறவுள்ள ஒரு பெரிய கூட்டத்திற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். எனது குடும்ப உறுப்பினர்களான அ.தி.மு.க., பா.ஜ.க தலைவர்களுடன் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. திருச்சி இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொதுக் கூட்டத்தில் பிரதமரை வரவேற்க அனைவரும் காத்திருக்கிறோம். பிரதமர் மோடி ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் நாட்டின் பெருமைக்காக அயராது உழைத்து வருகிறார். தமிழக மக்கள், தமிழ் கலாசாரம், தமிழர் பெருமை மீது மிகுந்த அக்கறை கொண்டவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஊழல் நிறைந்த தி.மு.க ஆட்சியை மாற்றப்போகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கையும், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற நல்லாட்சியையும் மீண்டும் கொண்டு வருவோம்.

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை
இபிஎஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து, தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றும். இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. இது குறித்து, அந்தந்த துறையினர் அவ்வப்போது விளக்கம் அளிப்பார்கள். நிலைமையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எங்களது முழு கவனமும் இப்போது பிரதமரை வரவேற்பதில் தான் உள்ளது.

என்டிஏ கூட்டணியில் விஜய்
கூட்டணியில் உள்ள அனைவரும் ஒரு குடும்பமாகச் செயல்படுகிறோம். தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை ஒரு அறைக்குள் நடக்கும். இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் முறைப்படி அறிவிப்போம். இபிஎஸ், கூட்டணியின் தலைவராக இருந்து சரியான நேரத்தில் இது குறித்து முடிவெடுப்பார். தவெகவை எங்கள் கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ் தான் சொல்ல வேண்டும். அவருக்குத் தான் இது குறித்து நன்றாகத் தெரியும். தினகரன், அன்புமணி, ஜி.கே.வாசன் என அனைத்து தலைவர்களும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறோம்.

இபிஎஸ் தலைமையிலான நல்லாட்சி
தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக தேர்தலைச் சந்திப்போம். தி.மு.க கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. ஆனால், கட்சிகளின் எண்ணிக்கையை விட, மக்களிடம் இருக்கும் செல்வாக்கும் வாக்கு வங்கியும் தான் முக்கியம். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மிகவும் வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க-வைத் தோற்கடித்து முழு பெரும்பான்மையுடன் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். தமிழ் கலாசாரத்திற்கு எதிரானவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். தமிழக மக்கள் இபிஎஸ் தலைமையிலான நல்லாட்சியையே தேர்ந்தெடுப்பார்கள்.
இவ்வாறு பியூஸ் கோயல் தெரிவித்தார்.

Related Link
திருச்சியில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்

திருச்சியில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசு, இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

5
17 mins agoshare
தஞ்சாவூரில் முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved