இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவக்கம் | Tirupati

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி, அங்குரார்ப்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி ஞாயிறன்று அங்குரார்ப்பணம் நடைபெற்றது. சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனாதிபதியை கோயில் அர்ச்சகர்கள், மேள, தாளம் முழங்க வசந்த மண்டபத்திற்கு கொண்டு சென்று பூஜைகள் நடைபெற்றன. பிரம்மோற்சவத்திற்காக ஆந்திர மாநில அரசின் சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் திருப்பதி செல்வதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment