Also Watch
Read this
By: Manigandan Raja

காசு கொடுக்காமல் சென்ற நபர்கள் :
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மப்பேடு ஊராட்சியில் உள்ள சம்பூர்ண இந்தியன் ஆயில் டீலர் பெட்ரோல் பங்கில் இரவு 8 மணி அளவில் TN 20AE7701 என்ற என் கொண்ட காரில் வந்தவர்கள் முதலில் ஆயிரம் ரூபாய்க்கு டீசல் போடும் படி சொன்னார்கள்.
தொடர்ந்து டேங்க் புல் செய்யும்படி கேட்டார்கள் முழுவதுமாக டீசல் போட்டு முடித்தவுடன் பம்ப் ஆப்ரேட்டர் நாகராஜ் அவர்கள் காரின் அருகே சென்று 4123, ரூபாய் காசு கேட்கும் பொழுது சட்டென்று கார் வேகமாக புறப்பட்டு சென்றது.
உடனடியாக இருசக்கர வாகனத்தில் காரை பின் தொடர்ந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கிய போது இருசக்கர வாகனத்தை தட்டி விட்டு கண்ணாடி கூட இறக்காமல் வேகமாக மின்னல் வேகத்தில் கார் புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து காரை பிடிக்க முடியவில்லை. உடனடியாக மப்பேடு காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை காட்சிகளை எடுத்துக்கொண்டு மப்பேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பெட்ரோல் போட்ட4123 ரூபாய் பெற்று தரும்படியும் இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.
இந்தியன் ஆயில் டீலர் உரிமையாளர் மப்பேடு ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சித்தையா ஜெகதீசன் அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved