இந்தியா

மோடி மதத்தின் பெயரால் அரசியல் செய்யவில்லை

மோடி மதத்தின் பெயரால் அரசியல் செய்யவில்லை

மோடி மதத்தின் பெயரால் அரசியல் செய்யவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மதத்தின் பெயரால் சமூகத்தை பிரிப்பது மோடியின் நோக்கமல்ல என கூறினார்.முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது தொடர்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை குறிப்பிட்டே மோடி பன்ஸ்வாராவில் பிரச்சாரம் செய்ததாக ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.மோடியுடன் தமக்கு நீண்ட நாள் பழக்கம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என்ற பாகுபாட்டை வைத்து மோடி ஒருபோதும் அரசியல் செய்ததில்லை எனவும் கூறினார். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

00 Comments

Leave a comment