தமிழ்நாடு

கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக் கூடாது என வழக்கு!

கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக் கூடாது என வழக்கு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பட்டாபிஷேகம் அன்று, கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக் கூடாது என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் கணவரை இழந்தவர் என்பதால், அவரிடம் செங்கோல் வழங்க கூடாது எனக் கூறி தினகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி சரவணன், கணவரை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பினார். கோவிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோலை வாங்குபவரும் இந்து தானே? என வினவிய நீதிபதி, இந்த காலத்திலும் இதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்களை ஏற்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

00 Comments

Leave a comment