இந்தியா

நகைக்கடை அதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

நகைக்கடை அதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நகைக்கடை அதிபரின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 5.6 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் 3 கிலோ தங்கம் மற்றும் 103 கிலோ வெள்ளி நகைகளும், 68 வெள்ளி பார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வரும் கர்நாடக போலீசார், நகைக்கடை அதிபரான நரேஷ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி, கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் நரேஷை விசாரணைக்கு அழைத்து சென்றதோடு, வழக்கு விவரங்களை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

00 Comments

Leave a comment