தவெகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவியின் வீட்டிற்குள், அம்மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் நாதன், நடுராத்திரியில் நுழைந்ததாக வீடியோ வெளியான நிலையில், திமுகவின் கைக்கூலிகள் சூழ்ச்சி செய்துள்ளதாக, மகளிர் அணி தலைவி வித்தியாச விளக்க வீடியோவும் வெளியிட்டிருந்தார். சுவரில் பல்லிபோல் ஒட்டிக் கொண்டு, பதில் சொல்லாமல் மழுப்பிய செந்தில்நாதன், அதிகாலையில் அரக்க பறக்க ஓடியதாக கூறப்படும் நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அடுத்த வீட்டை எட்டிப்பார்த்து, அசிங்கவேலையில் ஈடுபட்டுள்ள திமுக கைக்கூலிகளுக்கும், குடும்பம் குட்டிகள் இருக்கத் தானே செய்கிறது என த.வெ.க. பெண் நிர்வாகி, ஒருபக்கம் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல்நேரத்தில் ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்போது, அடுத்த வீட்டை எட்டிப்பார்க்கவா எங்களுக்கு நேரம் இருக்கிறது? என திமுகவினர் மறுபக்கம் பதிலடி கொடுத்து வருகிறார்களாம்.தமிழக வெற்றிக்கழக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் நாதன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு, விஜயமங்கலத்தில் நடந்த விஜய் பரப்புரையில் கலந்து கொண்டார். ராசிபுரத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில் அந்த மகளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.இந்நிலையில், விஜயின் பரப்புரை முடிந்து ஊர் திரும்பிய செந்தில்நாதன், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி வீட்டிற்கு இரவு 12 மணியளவில் சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செந்தில்நாதன் மகளிர் அணி தலைவியிடம் நெருங்கி பழகுவதாக அரசல் புரசலாக பேச்சு அடிபடும் நிலையில், அதனாலேயே பெண்ணின் உறவினர்கள் கடும்கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.கட்சி விஷயம் சம்மந்தமாக சென்னைக்கு செல்வது மற்றும் கூட்டங்களுக்கு செல்லும்போதுகூட மகளிர் அணி தலைவி செந்தில்நாதனுடன் காரில் சேர்ந்து சென்றதாகவும், அதற்கும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.மகளிர் அணி தலைவியின் கணவன், திமுகவை சேர்ந்த ஒரு நிர்வாகியிடம் டிரைவராக வேலை பார்ப்பதாகவும், அவருடனேயே பலநாள் வெளியூருக்கு சென்றுவிடுவதாகவும், அதனால் கணவன்-மனைவிக்குள் நல்ல உறவு இல்லையென்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மகளிர் அணி தலைவி வீட்டிற்கு நடுராத்திரி காரில் வந்த செந்தில்நாதனை, வீட்டுக்குள்ளேயே மடக்கிய பெண்ணின் உறவினர்கள் ரவுண்டு கட்டி, 2 மணிநேரத்திற்கும் மேலாக கேள்விக்குமேல் கேள்வி எழுப்பி உள்ளனர். சுவரோடு சுவராக பல்லிபோல் ஒட்டிக் கொண்டிருந்த செந்தில்நாதன், எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் மழுப்பிக் கொண்டிருந்தார். அது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.அதிகாலை 3 மணிவரை பேச்சுவார்த்தை நடந்து, அதன் பின்னர் 4 மணியளவில் செந்தில்நாதனை பெண்ணின் உறவினர்கள் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், சம்மந்தப்பட்ட மகளிர் அணி தலைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவறு ஒன்று நடக்க இருந்ததை தனது உறவினர்கள் சரியானநேரத்தில் தடுத்ததாக கூறியிருந்த மகளிர் அணி தலைவி, இல்லாத ஒன்றை திமுக கைக்கூலிகள் சித்தரிப்பதாகவும், வேண்டுமென்றே வீடியோ எடுத்து அதனை ஷேர் செய்து அசிங்கப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.மேலும், திமுக கைக்கூலிகள் வீட்டிலும் பெண்கள், குழந்தைகள் இருக்கத் தானே செய்வார்கள் என அமைதியாக ஆத்திரத்தை வெளிப்படுத்திய மகளிர் அணி தலைவி, இதுகுறித்து தலைமைக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும், செந்தில்நாதனை கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக புஸ்ஸி ஆனந்த் கூறி உள்ளதாகவும் தெரிவித்தார்.அதோடு, திமுகவினர் இழிவான அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கூறிய மகளிர் அணி தலைவி, நடந்த சம்பவத்திற்கும், தளபதிக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்ன தான் அவதூறு பரப்பினாலும் விஜய் வெற்றி பெறுவது உறுதி என கூறினார்.. இதுகுறித்து விளக்கம் கேட்க நியூஸ் தமிழ் செய்தியாளர் மாதேஸ்வரன், செந்தில்நாதனை தொடர்பு கொண்டு பேசியபோது, தன்மீது அபாண்டமாக பழி சுமத்துவதாகவும், தன்பெயரை கெடுக்கவே இதுபோன்று வதந்தி பரப்பப்படுகிறது என அவர் கூறினார்.அப்போது, எலச்சிபாளையம் தவெக கிழக்கு ஒன்றிய ஆலோசனை கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என செய்தியாளர் இடைமறிக்க, ஈரோடு விஜய் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சோர்வாக இருந்ததாகவும், அதனால்தான் கலந்து கொள்ளவில்லை எனக்கூறிய செந்தில்நாதன், சமீபத்தில் தேவனாங்குறிச்சியில் நடந்த திருச்செங்கோடு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில்கூட தான் கலந்துகொள்ளவில்லை என விளக்கமளித்தார்.இந்த விளக்கம் ஒருபக்கம் இருந்தாலும், இருட்டில் யோக்கியனுக்கு என்ன வேலை என்ற கேள்வியை முன்வைத்து செந்தில்நாதனை கட்சியில் இருந்து நீக்கி உள்ளது த.வெ.க. தலைமை.இதுஒருபுறமிருக்க, நடுஇரவில் ஒரு பெண் வீட்டுக்குள் புகுந்து எப்படி வீடியோ எடுக்க முடியும்? அப்படி வீடியோ எடுக்க யாரும் அனுமதிப்பார்களா? அதில் ஏதாவது லாஜிக் உள்ளதா? என கேள்வி எழுப்பும் திமுகவினர், அரசியல் களத்தில் யானைகளோடு போட்டி போடுவோமா? அல்லது பூனைகளோடு போட்டி போடுவோமா? செய்த தவறை மறைக்க பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா? WHAT BRO ITS VERY WRONG BRO என்று அவர்களின் தளபதி பாணியிலேயே கிண்டலடித்து வருகிறார்களாம்.