news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிக்கெட் இன்றி ராமேஸ்வரம் ரயிலில் பயணித்த 300 பேர்
tv

Also Watch

tv

Read this

டிக்கெட் இன்றி ராமேஸ்வரம் ரயிலில் பயணித்த 300 பேர்

ராமேஸ்வரம்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரயிலில் வந்த வட மாநிலத்தவர்கள் 300க்கும் மேற்பட்டோர், டிக்கெட் இன்றி பயணித்த நிலையில், அவர்களை பரிசோதனை செய்ய முயன்ற போது கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர்கள், டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக வந்த தகவலையடுத்து நடுவழியில் ரயிலில் ஏறிய பரிசோதகர்கள் சோதனை செய்தனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களை மடக்கி விசாரணை நடத்த முயன்றுள்ளனர். அப்போது, அந்த யாத்திரிகர்கள் அனைவரும் கும்பலாக ஒன்று சேர்ந்து, “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத், ஜெய் ஹோ” என கோஷமிட்டபடி அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சம்பவத்தால் செய்வது அறியாமல் திகைத்துப் போன டிக்கெட் பரிசோதகர்கள், வேறு வழியின்றி அவர்கள் சென்றதை பார்த்துக்கொண்டே நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் பரப்புரை வாகனத்தில் அதிகாரிகள் சோதனை

4
22 mins agoshare
விஜய் வாகனத்தில் சோதனைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved