தமிழ்நாடு

கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் ஒருவர் பலி

கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் ஒருவர் பலி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தருமபுரி-பெங்களூரு புதிய தேசிய
நெடுஞ்சாலையில் கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்து காருடன் ஒருவர்
பலி-போலீசார் விசாரணை

தருமபுரி-பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் சோமனஅள்ளி அருகே கசியம்பட்டி
பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த ஸிப்ட் டிசைர் ரக காரின் முன்பக்க
பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை தொடர்ந்து காரில் வந்தவர்
காரிலிருந்து இறங்குவதற்கு முன்பு திடீரென கார் தீப்பற்றி எரிந்துள்ளது
,இதனையடுத்து காரினை ஓட்டி வந்த நபர் இறங்குவதற்குள் தீப்பற்றி எரிந்துள்ளது
மேலும் வேகமாக பரவிய தீயின் காரணமாக கார் முழுவதும் எரிந்து கருகி சேதமானது.
காரினை ஓட்டி வந்தவர் காரில் இருந்து இறங்குவதற்குள் தீப்பற்றி முழுவதுமாக
எரிந்து பலியாகி உள்ளார்

இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு தீயைணைப்பு
துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இருப்பினும் கார் முற்றிலும்
எரிந்து சேதமடைந்தது.இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல்துறையினர் மேற்கொண்ட
முதற்கட்ட விசாரணையில், தீப்பற்றி எறிந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம்
ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் முரளி என்பதும் தெரியவந்தது.மேலும்
இந்த தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தீயில் கருகி உயிரிழந்த சஞ்சீவ் முரளியின் உடலை கைப்பற்றி தருமபுரி
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரிரேத பரிசோதனைக்காக அனுப்பி
வைத்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த தீ விபத்தின் காரணமாக
அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

00 Comments

Leave a comment