தமிழ்நாடு

கட்டுபாட்டை இழந்த அரசு பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது

கட்டுபாட்டை இழந்த அரசு பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு பேருந்து அய்யம்பேட்டை அருகே ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதில் லட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

00 Comments

Leave a comment