news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீறிப்பாய்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள்
tv

Also Watch

tv

Read this

சீறிப்பாய்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள்

சிவகங்கை

83

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
svg 6

உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் 100 காளைகள் தொழுவிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டதில் 3 பேர் பலியான நிலையில், 75 பேர் காயமடைந்ததில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடையுடன் அரளிப்பாறை மலை குன்றில் அமர்ந்து மஞ்சுவிரட்டை பாதுகாப்பாக கண்டுகளித்த ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில். மாசி மகப் பெருவிழாவையொட்டி பத்தாம் நாள் இன்று உலகப்புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.


500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் சிங்கம்புணரி அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் சிவகங்கை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு வயல் வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் கட்டு மாடுகளாக நிறுத்தி வைத்திருந்தனர். அரளிப்பாறை கீழ் பகுதியில் தொழுவின் முன் வாடிவாசல் அமைக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 100 காளைகள் தொழுவில் அடைக்கப்பட்டன. வட்டாட்சியர் நாகநாதன் முன்னிலையில் களத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாடுபிடி வீரர்கள் 112 பேர் களமிறக்கப்பட்டனர்.

ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள்
ஐந்துநிலை நாட்டார்கள் அனுமந்த கொடியுடன் ஜவுளி எடுத்து அரளிப்பாறை மலை உச்சியில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படடு தொழுவில் உள்ள கோயில் காளைகளுக்கு வேட்டி வழங்கி முதல் மரியாதை செய்தனர். முதலில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து தொழுவில் உள்ள மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைமுட்டியதில் 75பேர் காயம்
அதே நேரத்தில் ஆங்காங்கே வயல் வெளிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் பார்வயாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 75 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி 3பேர் உயிரிழப்பு
மேலும் இதில் லேசான காயமடைந்த நபர்களுக்கு பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவர் நபிஷாபானு தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இதில் சம்பவ இடத்திலேயே ஐஸ் விற்பனை செய்த ராஜஸ்தானை சேர்ந்த ஜம்முலால் லால்ஜி 40, சிகிச்சை பலனின்றி நாட்டார்மங்கலம் ராம்நாதன் 23, புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் 48 என மூன்று பேர் உயிரிழந்தனர்.


Related Link
என்னம்மா இப்படி  பண்றீங்களேம்மா..

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 17042026

0
11 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 17042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved