தமிழ்நாடு

120 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்; ஒருவர் கைது

120 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்; ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், காரின் எஞ்சின் பகுதியில் மறைத்து கடத்தி செல்லப்பட்ட கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி சமய்சிங் மீனா உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற டாட்டா சுமோ காரை விரட்டி பிடித்து சோதனை செய்ததில், எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை 2 லாரி டியூப்களில் அடைத்து எஞ்சின் பகுதியில் மறைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது. கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சரவணனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

00 Comments

Leave a comment