news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து

தேர்வாய் சிப்காட், திருவள்ளூர்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Issue

தொழிற்சாலையில் தீ விபத்து :

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் சிப்காட் பகுதியில் கெமிக்கல் உற்பத்தி செய்யும் பாலாஜி கெமிக்கல் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் சல்பியூரிக் ஆசிட் பயன்படுத்தி பல்வேறு விதமான கெமிக்கல் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென தொழிற்சாலை கட்டிட வளாகத்திற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த சல்பியூரிக் ஆசிடில் ஏற்பட்ட தீயினால் தொழிற்சாலை முழுவதும் புகைமண்டலமாய் காட்சியளித்தது. மேலும் வான் உயர பறந்த புகையினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை புகைமண்டலமாய் காட்சியளித்தது.

நிலைமையை அறிந்த தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் தேர்வாய் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

ஆசிட் என்பதால் ஒருவித எரிச்சலுடன் கூடிய நெடியானது புகையுடன் கலந்து வெளியேறி வருவதால் சல்பியூரிக் ஆசிட் ஒட்டி வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நுழைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள அறை முழுவதும் சேதமான நிலையில் இச்சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சல்பியூரிக் ஆசிட் ஏற்பட்ட தீ விபத்தா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 2ஆவது நாளாக ஆய்வு

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 2ஆவது நாளாக ஆய்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
1 hr 35 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved