தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உடல் உபாதை மற்றும் குடும்ப வறுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ஆசிட் குடித்து தற்கொலை முயன்றனர். ராசிபுரம் மல்லிச்செட்டி தெருவை சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகர் - வத்சலா. இவர்களது 40 வயது மகன் விமலுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், மூவருக்கும் நீரிழிவு உள்ளிட்ட உடல் உபாதைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குடும்ப வறுமை காரணமாக சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாமல், திண்டாடிய குடும்பத்தினர் விரக்தியில் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயல உயிருக்கு போரடியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

00 Comments

Leave a comment