இந்தியா

தெலங்கானாவில் 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத பாலம் இடிந்து விழுந்தது.!

தெலங்கானாவில் 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத பாலம் இடிந்து விழுந்தது.!

தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் 8 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத பாலத்தின் ஒரு பகுதி, அதிவேகமாக வீசிய காற்றில் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைர் ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த 2016ஆம் ஆண்டு பாலம் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத பாலத்தின் 2 கான்கிரீட் கிர்டர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் சரிந்து விழுந்தன. மீதமுள்ள பாலமும் விரைவில் இடிந்து விழுந்துவிடும் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசியல்வாதிகள் கமிஷன் கேட்டு தொல்லை செய்ததால் ஒப்பந்ததாரர் பணிகளை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment