தமிழ்நாடு

நள்ளிரவில் பிள்ளையார் சிலை நடுரோட்டில் உடைப்பு ...பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேருக்கு வலைவீச்சு

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நள்ளிரவில் பிள்ளையார் சிலையை எடுத்து சாலையில் வீசி உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 3 அடி உயரமுள்ள களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டனர். பின்னர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், அந்த சிலையை எடுத்து நடுரோட்டில் போட்டு உடைத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், உடைந்த சிலையை அப்புறப்படுத்தி அருகில் உள்ள கிணற்றில் கரைத்தனர். பின்னர், 2 அடி உயரமுள்ள புதிய பிள்ளையார் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. 

00 Comments

Leave a comment