தமிழ்நாடு

ஆச்சநாயக்கன்பட்டி காடுவெட்டி குளத்தில் மீன்பிடித் திருவிழா

ஆச்சநாயக்கன்பட்டி காடுவெட்டி குளத்தில் மீன்பிடித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஆச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள காடுவெட்டி குளத்தில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு, வலை, பரி, கூடை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு, போட்டி போட்டுக் கொண்டு கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்து சென்றனர். 10க்கும் மேற்பட்டோருக்கு சுமார் 5 கிலோ எடையுள்ள விரால் மீன்கள் கிடைத்தன. மீன்பிடி திருவிழாவில் பிடிக்கும் மீன்கள் விற்பனை செய்யப்படுவது கிடையாது. அவரவர் வீடுகளுக்கு மீன்களை எடுத்துச் சென்று சமைத்து அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்வது வழக்கம்.
 

00 Comments

Leave a comment