விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கெதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கெதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால், 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக விலகியிருந்த கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

00 Comments

Leave a comment