தமிழ்நாடு

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற கணவன் கைது

ஒட்டன்சத்திரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை
காரில் ஏற்றி கொலை செய்ய முயன்ற கணவர் - போலிசார் வழக்குப் பதிவு செய்து
விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியைச்
சேர்ந்த பிரதீப்குமார்(29) என்பவருக்கும், வீரலப்பட்டி கிராமம்
வண்ணாம்பாறையைச் சேர்ந்த நந்தினி(25) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு
திருமணமாகி, கடந்த மூன்று மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து
வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நந்தினி ஒட்டன்சத்திரத்தில் உள்ள
வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் கணினி பிரிவில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து
வருகிறார். இந்நிலையில் இன்று கள்ளிமந்தையம் அருகே நீலாக்கவுண்டன் பட்டி
பகுதியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு
நந்தினி மற்றும் நந்தினி பணியற்றும் அலுவலகத்தில் தற்காலிக மண்டல அலுவலக
பணியாளராக பணிபுரியும் வீரப்பட்டி கிராமம் வண்ணாம்பாறையைச் சேர்ந்த
அசோக்குமார்(29) என்பவரை அழைத்துக் கொண்டு தன்னுடை இருசக்கர
வாகனத்தில்(ஸ்கூட்டி) சென்றுள்ளார். பின்னர் கூட்டம் முடிந்து திரும்பி
வரும்போது அசோக்குமார் இருசக்கர வாகனத்த்தில் நந்தினியை பின்னால் அமர வைத்து
வரும்போது பின்தொடர்ந்து அதிவேகமாக காரில் வந்த நந்தினியின் கணவர்
பிரதீப்குமார் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருசக்கர வாகனத்தில்
பயங்கரமாக மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நந்தினியை
காரில் தூக்கி போட்டுக்கொண்டு அசோக்குமாரை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு
பிரதீப்குமார் ஒட்டன்சத்திரம் - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை நாயக்கனூர்
பகுதியில் செல்லும் போது காரில் அழரல் சத்தம் கேட்டு அப்பகுதியில்
இருந்தவர்கள் காரை பின்தொடர்ந்து வருவதைக் கவணித்த பிரதீப்குமார் காரை
நிறுத்தி நந்தினியை அங்கேயே இறக்கிவிட்டு விட்டு தப்பித்துச் செல்லும் போது
தும்பிச்சம்பட்டி பகுதியில் வைத்து பொதுமக்கள் பிடித்து போலிசாரிடம்
ஒப்படைத்தனர். இதனிடையே காயமடைந்த நந்தினி மற்றும் அசோக்குமாரை ஆம்புலன்ஸ்
மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாலி கட்டிய மனைவியை
காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரதீப்குமார் கொலை முயற்சி வழக்கில்
கைது செய்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்கு அனுமத்து அம்பிளிக்கை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை கணவரே காரை ஏற்றி
கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி  காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற கணவன் கைது

00 Comments

Leave a comment