தமிழ்நாடு

நுங்கு பறிக்க பனைமரம் ஏறியவர் தவறி விழுந்ததில் பலி

நுங்கு பறிக்க பனைமரம் ஏறியவர் தவறி விழுந்ததில் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நுங்கு பறிக்க பனைமரம் ஏறிய இளைஞர் கால் இடறி தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரதன் என்பவர் மீது டாஸ்மாக் கொள்ளை வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று பரதன் தனது நிலத்தில் உள்ள பனை மரத்தில் நுங்கு பறிக்க ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி தலை குப்புற கீழே விழுந்து பலத்த காயமடைந்த பரதனை அருகிலிருந்தவர்கள் டெம்போ வேனில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

00 Comments

Leave a comment