சென்னையில் மட்டும் இந்த மாதத்தில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு மட்டும் 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை தடுக்க சென்னை வால்டாக்ஸ் சாலையில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ராதாகிருஷ்ணன் அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறினார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment