news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டைல்ஸ் கல்லால் அடித்து தாயை கொ*ற மகன்
tv

Also Watch

tv

Read this

டைல்ஸ் கல்லால் அடித்து தாயை கொ*ற மகன்

கயத்தாறு, தூத்துக்குடி

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பெற்ற தாயை டைல்ஸ் கல்லால் அடித்துக் கொலை செய்த மகன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரின் தலையை துண்டாக்கி வீசிய வழக்கில் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த நிலையில் மீண்டும் அரங்கேறிய பயங்கரம். அடுத்த சிலமாதங்களில் உடன்பிறந்த அக்காவின் கையை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி. ஒரு கொலை, ஒரு கொலை முயற்சி என மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட இளைஞர் பெற்ற தாயை எதற்காக கொலை செய்தார்? கொலைக்கான பின்னணி என்ன?

* தனது தாய் தலையில் டைல்ஸ் கல்லால் அடித்த மகன்
* கையில் டைல்ஸோடு அமர்ந்திருந்த மகனை பிடித்த போலீஸ்
* விசாரணையின்போது ஒரே பதிலையே சொன்ன மகன்


ஒரு மகன் தன்னோட தாயை டைல்ஸ் கல்லால பலமுறை தலையில அடிச்சிருக்காரு. அதுல, அதிக ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிட்டு இருந்த தாயை அக்கம்பக்கத்துல உள்ளவங்க மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிட்டு போலீசுக்கும் தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் கையில் டைல்ஸோட உக்காந்துட்டு இருந்த மகனை சுத்தி வளைச்சி பிடிச்சி விசாரிச்சிருக்காங்க. அப்போ, பணம் கேட்டேன் தரல அதான் அடிச்சேன்னு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்துருக்காரு மகன். அதுக்குமேல என்ன கேள்வி கேட்டாலும் போலீசாரோட விசாரணைக்கு ஒத்துழைப்பே குடுக்கல மகன். அடுத்து, அக்கம்பக்கத்துல உள்ளவங்ககிட்ட விசாரிச்சிருக்காங்க போலீசார்.. அப்பதான் சில விஷயங்கள் தெரியவந்துச்சு.

* இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்த வேலுச்சாமி
* வேலுச்சாமியின் மனைவி இசக்கியம்மாளுக்கு தகாத உறவு


தென்காசி, சங்கரன்கோவில் பக்கத்துல உள்ள கண்ணாடிகுளம் கிராமந்தான் வேலுச்சாமியோட சொந்த ஊரு. ஆனா, இளநீர் வியாபாரம் செய்றதுக்காக தூத்துக்குடி பக்கத்துல உள்ள கயத்தாறுக்கு வந்துருக்காரு வேலுச்சாமி. கணவர் வியாபாரத்துக்குப் போன கேப்ல வேலுச்சாமியோட மனைவி இசக்கியம்மாளுக்கு உள்ளூர்ல இருந்த வேல்முருகன்ங்குறவர்கூட நெருக்கம் ஏற்பட்ருக்குது. அந்த நெருக்கத்த பத்தி வேலுச்சாமிக்கிட்ட சொன்ன உறவினர்கள் கொஞ்ச நாளைக்கு உன் மனைவிய உள்ளூர்ல வைக்க வேண்டாம், கயத்தாறுக்கே அழைச்சிட்டு போய்ருனு சொல்லிருக்காங்க. ஆனா, மனைவிய கண்டிச்ச வேலுச்சாமி இனி இசக்கியம்மாள் ஒழுங்கா இருப்பாங்கனு நினைச்சி இளநீர் வியாபாரத்துக்கு தொடர்ந்து போயிட்டுதான் இருந்துருக்காரு. கணவன் கண்டிச்சும் காதுல வாங்காத இசக்கியம்மாள் கள்ளக்காதலன்கூட தனிமையில இருந்துருக்காங்க. அதனால, தம்பதிக்குள்ள சண்டை முத்திருக்குது. அதுக்குப்பிறகு, ராஜாபுதுக்குடியில உள்ள தன்னோட தாய் வீட்டுக்கு போய்ட்டாங்க இசக்கியம்மாள். மனைவி தன்னைவிட்டு பிரிஞ்சி போக காரணமே வேல்முருகன்தானு ஆத்திரமடைஞ்ச வேலுச்சாமி, கள்ளக்காதலனோட தலையை தனியா அரிவாளால வெட்டி எடுத்து ராஜாபுதுக்குடியில உள்ள மனைவி வீட்டு பக்கத்துல வீசிட்டு போய்ட்டாரு.

* தனது அக்காவின் கையை வெட்டிய வேலுச்சாமி
* வேலுச்சாமியை வீட்டைவிட்டு அனுப்பிய அவரது அக்கா
* மகனுடன் கயத்தாறுக்கு சென்ற தாய் அன்னபாக்கியம்


இந்த வழக்குல ஜெயிலுக்குப்போன வேலுச்சாமி ஒரு வருஷம் கம்பி எண்ணிருக்காரு. அடுத்து, சிறையில இருந்து வெளிய வந்த அவரு தூத்துக்குடியில உள்ள தன்னோட அக்கா வீட்டுக்கு போய் தங்கிருக்காரு. சிலநாட்கள்லயே அக்காவுக்கும் தம்பிக்கும் தகராறு ஏற்பட்ருக்குது. அப்போ, அரிவாளால அக்காவோட கைய வெட்டுன வேலுச்சாமி கொலை செய்யவும் முயற்சி பண்ணிருக்காரு. கூட பொறந்த தம்பியாச்சே, ஏற்கெனவே ஒரு கொலை பண்ணிட்டு இப்ப தான் சிறையில இருந்து வெளிய வந்துருக்கானு பரிதாபப்பட்டு வேலுச்சாமி மேல போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுக்காம மன்னிச்சிவிட்ட அக்கா, ஆனா இனிமேல் உயிருக்கு உத்தரவாதம் இல்லனு வேலுச்சாமியை வீட்டைவிட்டு அனுப்பிட்டாங்க. அக்கா உதறிவிட்டாலும் பெத்த புள்ளைய தாய் உதறிவிட முடியாதேனு மகனை கயத்தாறுத்தாறுக்கு அழைச்சிட்டுப்போய் தெற்கு சுப்பிரமணியபுரம் காலணியில ஒரு வாடகை வீடு எடுத்து தங்கிருக்காங்க வேலுச்சாமியோட அம்மா அன்னபாக்கியம். அங்கபோய் மறுபடியும் இளநீர் வியாபாரம் பண்ணுவாரு, ஒழுங்கா திருந்தி இருப்பாருனு நினைச்சிதான் தாய் அங்க அழைச்சிட்டு போய்ருக்காங்க. ஆனா, அவங்க நினைச்சமாதிரி எதுவுமே நடக்கல.

* மது குடிக்க பணம் கேட்டு தாயை டார்ச்சர் செய்த மகன்
* பணம் கொடுக்காதபோது அடித்து துன்புறுத்திய மகன்
* வேலுச்சாமியை கைது செய்த காவல்துறையினர்


கூலி வேலைக்குப்போன தாய்கிட்ட தினமும் மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர் பண்ணிருக்காரு வேலுச்சாமி. சிலநேரங்கள்ல பணம் குடுக்கலனா அடிச்சி அரக்கத்தனமா நடந்துக்கிட்ட மகன் தாய்னுகூட பாக்காம எட்டி உதைச்சிருக்காரு. அப்படிதான், சம்பவத்தன்னைக்கும் தாய்கிட்ட பணம் கேட்ருக்காரு. ஆனா, தாய் பணம் இல்லனு சொன்னதால ஆத்திரமடைஞ்ச வேலுச்சாமி டைல்ஸ் கல்லால தலையில பலமுறை அடிச்சிருக்காரு. அதுல அதிக ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிட்டு இருந்த அன்னபாக்கியம் ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுபோற வழியிலேயே உயிரிழந்துட்டாங்க.

வேலுச்சாமியை போலீசார் கைது செஞ்சுட்டாங்க. அவரு மதுபோதைக்கு அடிமையாகி இருக்குறதாகவும் அதோட கொஞ்சநாளா மனநிலை சரியில்லாம நடந்துக்குறதாகவும், அதனாலதான் இப்படி நடந்துக்குறதாகவும் சிலர் சொல்றாங்க. அதனால, மருத்துவர்களும் வேலுச்சாமியை பரிசோதனை பண்ணிருக்காங்க.

Related Link

"புள்ள முக்கியமா? படிப்பு முக்கியமா?"

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

3
19 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved