Also Watch
Read this
By: Manigandan Raja

h1b விசாவுக்கு சுமார் ரூ.96 லட்சம் கட்டணம் வசூலிக்கும் திட்டம்
ஹெச்1பி விசாவுக்கு சுமார் 96 லட்ச ரூபாய் கட்டணம் வசூலித்து செயல்படுத்துவது தொடர்பான திட்டத்தை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்துவதற்கு மாவட்ட நீதிமன்றம் விதித்த தடையை நீக்க நிதிபதிகள் மறுத்தது, டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோவில் எபோலா தொற்று உயிரிழப்புகள் அதிகரிப்பு

காங்கோவில் எபோலா தொற்று உயிரிழப்புகள் 1,300-ஐ கடந்தது. கடந்த மே 15 தொடங்கிய இந்த நோய்ப் பரவலில், மொத்தம் 2,973 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது பரவி வரும் bundibugyo வகை எபோலா வைரசுக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதுமில்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி நியமனம்
ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி 2வது முறையாக மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியை நீட்டிக்கும் முறை சரியில்லை என்றும், வெளிப்படை தன்மை இல்லை என்றும் கூறி அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை வோல்கர் டர்க் கடுமையாக விமர்சித்திருந்தார். அதனால் அவருடைய பணி நீட்டிப்பு, இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில், ஐ.நா. விதிகளின்படியே பொதுச்செயலர் முடிவு ஏற்கப்பட்டுள்ளதாக, ஐ.நா. விளக்கம் அளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved