தமிழ்நாடு

கல்குவாரிகளை கண்டித்து விவசாயி உண்ணாவிரதம்

கல்குவாரிகளை கண்டித்து விவசாயி உண்ணாவிரதம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கல்குவாரிக்கு எதிராக விஜயகுமார் என்ற விவசாயி ஒருவர் தனியாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். கோடாங்கி பாளையத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான SVA எழில் புளு மெட்டல் கல்குவாரிகளில் அதிகளவு வெடிப்பொருள் பயன்படுத்துவதால் குடியிருக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, விவசாயி தொடர்ந்து 5வது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார். 2 மாவட்டங்கள் அழியும் அளவுக்கு வெடிப்பொருட்கள் பதுக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர் இதனை தனிப்பட்ட இருவரின் பிரச்சனையாக மாற்ற முயல்வதாகவும் கூறியுள்ளார்.

00 Comments

Leave a comment