Also Watch
Read this
By: Manigandan Raja

திருமங்கலம் வேட்பாளரா? :
தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது தேர்தல் ஆணையத்தின் மூலம் அதற்கான அறிவிப்பு வரும் மார்ச் 10 ஆம் தேதிக்கு மேல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக,அதிமுகவினர் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக அதிமுகவினர் இடையே பிரச்சாரம் செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
நலத்திட்ட உதவிகள் என்னும் பெயரில் திமுக சார்பில் ஒருபுறம் சில்வர் பாத்திரம்,அதிமுக சார்பில் ப்ளாஸ்டிக் வாளி,பெண்களுக்கு சேலை என வாரி வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் தாமாக கிராமமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு போட்டியாக திமுகவினர் திமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக கொடுத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று கள்ளிக்குடி அருகே உள்ள எம். புளியங்குளம் கிராமத்தில் திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல்,துணை அமைப்பாளர் ஆதவன் அதியமான் ஆகியோர் தலைமையில் அரசின் சாதனைகளை விளக்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்தும், வெற்றிலை பாக்கு வழங்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் இன்னும் திமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறாத நிலையில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளிவரவில்லை.ஆனால் அதற்கு முன்பாகவே திருமங்கலம் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் போட்டியிடுவதாக கூறி அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved