மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை களைகட்டியது. மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சிலை தயாரிப்பு கூடத்தில் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியன்று தங்களது பகுதி மற்றும் வீடுகளில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். விநாயகர் குழந்தைகளுடன் இருப்பது போலவும், சிம்ம வாகனத்தில் எழுந்தருளுவது போன்றும், சிவபெருமானுடன் இருப்பது போலவும் என பல்வேறு வடிவ விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கிச் சென்றனர். பிரமாண்ட விநாயகர் சிலைகளை லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களிலும் எடுத்துச் சென்றனர். விநாயகர் சிலைகள் அடி ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என அளவிற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment