தமிழ்நாடு

மகாராஷ்டிராவில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்குக

மகாராஷ்டிராவில் முஸ்லீம்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்குக

 

மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஐந்து சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குமாறு சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி சட்டப்பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கடந்த ஆட்சியில் முஸ்லீம்களுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அதை நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை எழுந்துள்ளது.

00 Comments

Leave a comment