தமிழ்நாடு

சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பம் வீட்டின் தூண்களில் கட்டி வைத்த அவல நிலை

என்ன புத்திசாலி தனம். மின்கம்பத்தை கயிறு மூலம் இழுத்து வீடுகளின் தூண்களில்
கட்டி வைத்த சம்பவம் தாம்பரம் அருகே செம்பாக்கதில் நிகழ்ந்துள்ளது*

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் டெலஸ்
காலனியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்வை அமைக்க பணிகள் நடைபெற்று
முழுவதும் முடிவடைந்துள்ளது.
இதனால் இந்த பகுதியில் பல்வேறு புதிய மின்கம்புகள் மாற்றி அமைக்கப்பட்டது .

அவசர அவசரமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டதால்
அவசரத்திற்கு ராட்சச கயிறுகளால் மின்கம்பத்தை இழுத்து அருகே உள்ள வீட்டின்
பில்டிங் தூண்களில் இழுத்து கட்டி உள்ளனர் .கடந்த 20 நாட்களுக்கு மேலாக
மின்கம்பத்தை இழுத்து கட்டிய கயிறுகள் வீட்டின் தூன்களில் இருப்பதால் வீட்டின்
உரிமையாளர்கள் கயிறுகளை அகற்ற அதிகாரிகள் தெரிவித்தால் கண்டு கொள்ளவில்லை என
வேதனை தெரிவித்துள்ளனர்.இது சம்பந்தமாக செம்பாக்கம் மின்சார துறை
அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்ட போது மின் கம்பத்தை கயிறு மூலம் இழுத்து
கட்டியது எங்களுக்கே தெரியாது என பதில் அளித்துள்ளனர்.

செய்தி எடுத்ததை அறிந்த மின் துறை அதிகாரிகள் இரவு ஆறு மணி மேலாக மின்
இணைப்பை துண்டிவிட்டு இரவு மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பம்  வீட்டின் தூண்களில் கட்டி வைத்த அவல நிலை

00 Comments

Leave a comment