தமிழ்நாடு

இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்

இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்

திருச்சி லால்குடி அருகே இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டில் ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான கையேடு உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பாஜக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருமங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்த அக்கட்சியின் கிளை செயலாளர் வினோத்குமார், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வினோத்குமாரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய தேர்தல் பறக்கும்படையினர், கழிவறையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய், பணப்பட்டுவாடா செய்வதற்கான பட்டியல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
 

00 Comments

Leave a comment