விடிந்தும் விடியாமலும் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பெயிண்டர். அதிகப்படியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மனைவி. மனைவி உயிரிழந்ததும் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன கொடூரன். கட்டிய மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? தப்பி ஓடிய கணவன் பிடிபட்டாரா?
வீட்டிற்குள் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்த ரூபா
பெயிண்டர் வேலை பாக்குற கார்த்திக் வழக்கம்போல வேலைக்கு போய்ருந்துருக்காரு. மனைவி ரூபா மட்டும் வீட்டுல இருக்க, ரெண்டு பசங்களும் அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருந்துருக்காங்க. அந்த நேரம் பாத்து, தற்செயலா சொந்தக்காரங்க சிலர் ரூபாவ, பாக்க வந்திருக்காங்க. வாசல்ல நின்னு ரூபா, ரூபான்னு கூப்டுருக்காங்க. ஆனா வீட்டுக்குள்ள இருந்து எந்த சத்தமும் வரல. அதனால, சந்தேகப்பட்டு உள்ள போய் பாத்துருக்காங்க சொந்தக்காரங்க. அப்ப, வீட்டுக்குள்ள ரூபா, ரத்த வெள்ளத்துல மூச்சு பேச்சு இல்லாம கிடந்துருக்காங்க. அத பாத்ததும் அதிர்ச்சியானவங்க, உடனே அக்கம் பக்கத்துல உள்ளவங்க உதவியோட, ரூபாவ மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போனாங்க. அவங்கள பரிசோதனை பண்ண டாக்டர்கள், ரூபா ஏற்கெனவே உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க.