news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பதில் இருக்கும்

கேள்விகளுக்கு பதில்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gambir

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பேச்சு

இலங்கைக்கு எதிரான தொடரின்போது, வெளியிலிருந்து கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இந்திய அணியிடம் பதில் இருக்கும் என அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தங்களுக்கு முன்பாக என்ன சவால் இருக்கிறது என்பது தெரியும் எனவும், எதற்காக விளையாடுகிறோம் என்பதும் தங்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து துறைகளிலும் தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் எனவும், வரும் 15-ம் தேதி நடக்கும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது பந்துவீசினாலும் தங்கள் மீது தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இருக்கும் என்றார்.

உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள்

உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை தகுதிச் சுற்று போட்டிகளை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயம், போட்டி நடைபெறும் இடங்களை முடிவு செய்யவில்லை. தகுதிச் சுற்றில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. 14-வது ஐ.சி.சி. ஒருநாள் போட்டி உலகக் கோப்பை 2027 அக்​டோபர் 4-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன.

கபில் தேவ் சாதனையை முறியடிக்கும் மிட்செல் ஸ்டார்க் 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முறியடிக்கவுள்ளார். கபில் தேவ் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 434 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் இதுவரை 105 போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்த சூழலில், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்கள் கைப்பற்றினால் கபில் தேவின் சாதனையை முறியடிப்பார்.

Related Link
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புழல் ஏரிக்கு பெரும் ஆபத்து..!

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved