Also Watch
Read this
By: Manigandan Raja

விளையாட்டு வீரருக்கு நேர்ந்த அவமதிப்பிற்கு கண்டனம்
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்தவரும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான திலீப் காவிட், MNS தலைவர் ராஜ் தாக்கரேவைச் சந்திக்க 2 மணி நேரம் காத்திருந்தும் சந்திக்க முடியாமல் திரும்பியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீட்டர் T47 பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, காவிட் சாதனை படைத்தார். இந்த நிலையில் நாசிக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராஜ்தாக்கரேவை சந்திக்க அழைப்பின் பேரில் சென்ற காவிட், அவரை சந்திக்க முடியாமல் திரும்பினார்.
சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சறுக்கியபடி சென்று தனியார் பேருந்தின் அடியில் சிக்கியது. மணார்காடு பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஸ்ரீதேவி என்பவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலையில் நிகழ்ந்த விபத்து பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்காட்டில் வீட்டின் சுவர் மீது லாரி சாய்ந்து விபத்து
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், சாலையில் சென்ற லாரி ஒன்று எதிரே வந்த மற்றொரு லாரிக்கு வழிவிட முயன்ற போது வீட்டின் சுற்றுச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.

கள்ளியாடு-சோரனூர் சாலையில் பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, எதிரே வந்த மற்றொரு லாரிக்கு வழிவிட முயன்றது. அப்போது அதிக பாரம் தாங்காமல் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved