news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஊக்கமளிக்கிறது என பிரதமர் பெருமிதம்

செங்கோட்டையில் 13வது முறை கொடியேற்றுகிறார் பிரதமர்

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் பெருமிதம்

சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். நாட்டின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், பொதுத் தேர்வுகளைச் சீரமைக்கும் நடவடிக்கை, ஆபரேஷன் சிந்தூர், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு ஆற்றிய உரை ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

செங்கோட்டையில் 13வது முறை கொடியேற்றுகிறார் பிரதமர்
நாட்டின் 80ஆவது சுதந்திர தினத்தையொட்டி , டெல்லி செங்கோட்டையில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து 13ஆவது முறையாக செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.

முதல்முறையாக ஒலிக்கிறது வந்தே மாதரம்
வரலாற்றில் முதல்முறையாக, டெல்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது. ’வந்தே மாதரம்’ பாடலின் 150ஆவது ஆண்டு நினைவு கூரப்படும் நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80ஆவது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்ற நிகழ்வுடன் வந்தே மாதரம்’ இசைக்கப்படுவது முக்கிய நிகழ்வாக இடம்பெறுகிறது.

ராணுவ கட்டுப்பாட்டில்...
செங்கோட்டையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ள நிலையில், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Link
வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய மக்களவை

வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய மக்களவை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோட்டையில் கொடி ஏற்றுகிறார் முதல்வர் விஜய்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved