Also Watch
Read this
விஜய் அரசியலோட திரிஷாவையும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செஞ்சுக்கிட்டிருக்கு, இந்த விமர்சனங்கள்ல இருந்து ஒதுங்கியிருந்த திரிஷா இப்போ வெளிப்படையா ரியாக்ட் செய்யத் துவங்கியிருக்காரு, இதுக்குப் பின்னாடியும் ஒரு அரசியல் இருக்குன்னு பேசிக்கிறாங்க.

எப்பவும் அடக்கியே வாசிக்குற திரிஷா நற்பணி மன்றம் இப்போ வெளிப்படையா அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்லத் துவங்கியிருக்கு. திரிஷாவும் நேரடியா தன்னைப் பத்தி வர்ற விமர்சனங்களுக்கு ரியாக்ட் செய்யத் தொடங்கியிருக்காங்க.

தூத்துக்குடியில நடந்த பொதுக்கூட்டத்துல அதிமுகவோட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் விஜய்ய பத்தி கடுமையான விமர்சனங்களை முன்வெச்சுட்டு, திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம்னு பேசியிருந்தாரு.

இதுக்கு மதுரை திரிஷா நற்பணி மன்றம் மதுரையில உதயகுமாருக்கு எதிரா கடுமையான கண்டன போஸ்டர்கள ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துனாங்க.

திரிஷாவும், ’இந்த வயசுல நாடகமாடுறது அசிங்கமானது, பணம் சம்பாதிச்சு நிம்மதியை தேடுங்க’ன்னு உதயகுமாருக்கு பதில் சொல்லியிருக்காரு.

உதயகுமாரோட தூத்துக்குடி பேச்சு பத்தி அந்த மாவட்டத்தோட தவெக நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி.கிட்ட புகார் கொடுத்திருக்காங்க. கிட்டத்தட்ட எதிர்கட்சித்தலைவர் உதயநிதி மேல கொடுத்த புகார் மாதிரியே, முதல்வர் பத்தி தரக்குறைவா ஒருமையிலும், தமிழக பெண்கள் பத்தி அவதூறு பரப்பியும் உதயகுமார் பேசியிருக்காருன்னு கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்காங்க. அநேகமா அவதூறு வழக்குல அடுத்த கைது உதயகுமாரா இருக்கலாம்னு பேசிக்கறாங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved