Also Watch
Read this

பிரதமர், முதல்வர் கொடியேற்றம்
நாட்டின் 80ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு முதலமைச்சரான பின் முதல் முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார் ச.ஜோசப் விஜய்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் ஆற்றும் சுதந்திர தின உரையில் தமிழகத்திற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள் அலங்கரிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. மாநில தலைமைச் செயலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை கட்டடங்களில் கண்கவர் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மூவர்ண விளக்குகளால் அரசு அலுவலகங்கள் ஜொலிப்பு
சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேசியக் கொடியின் வண்ணங்களில் காட்சியளிக்கிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved